தேசியக்கொடிக்கு கைகளால் வண்ணம் தீட்டி பள்ளி மாணவிகள் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

தேசியக்கொடிக்கு கைகளால் வண்ணம் தீட்டி பள்ளி மாணவிகள் சாதனை

புதுச்சேரியில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில், இரண்டு பள்ளி மாணவிகள், 19 மணி நேரத்தில், 28 அடி அகலம் - 133 அடி நீளத்திற்கு, கைகளால் மூவர்ண்ண தேசிய கொடிக்கான வண்ணம் தீட்டி சாதனை படைத்தனர்.
இந்த மாணவிகளின் சாதனையைப் பாராட்டி கலாம் புக் ஆப் ரெகார்டில் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், இரு பள்ளி மாணவிகள் கைரேகை மூலம் மூவர்ண்ண தேசிய கொடிக்கான வண்ணம் தீட்டும் சாதனை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 28 அடி அகலம், 133 அடி நீளத்திற்கு தேசியக் கொடியை வண்ணம் தீட்டி தயாரித்துள்ளனர். புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் உள்ள மணிகண்டன் - கமலி தம்பதியரின் 7ம் வகுப்பு மாணவி தீக்சிதா, 3ம் வகுப்பு மாணவி வர்ணிதா ஆகியோர், 19 மணி நேரம் 30 நிமிடம் எடுத்து தேசியக் கொடியில் வண்ணம் தீட்டினர். ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை கெளரவிக்கும் வகையில் இதனை செய்துள்ளனர். இதனை முன்னாள் அமைச்சர் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேல், ஜான்குமார் உள்ளிட்டோர், மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது சாதனையை போற்றும் வகையில், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews