Breaking

Sunday, August 29, 2021

செப்.1 பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா பொதுமுடக்கத் தளா்வால் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும், செப்டம்பா் 15ஆம் தேதிக்குப் பின் பிற வகுப்புகளுக்கும் பள்ளி செயல்பாடு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


அதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆயத்தமாகி வருகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog