தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!! - தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!! - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - நாள்.13.08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 13, 2021

Comments:0

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!! - தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!! - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - நாள்.13.08.2021

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை 13.08.2021ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான அறிவிப்புகள் அறிவித்ததை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கின்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததையும். அதேபோல் மகளிர் அரசு ஊழியருக்கு 12 மாதகாலம் மகப்பேறு விடுப்பு வழங்கியதையும் வரவேற்கிறோம்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள கீழ்க்காணும் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில இல்லாதது எமாற்றம் அளிக்கிறது. அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள். ஊர்புற நூலகர்கள், எம்ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும். கொரோனாவை காரணம் காட்டி 27 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி அறிவிக்காதது, அரசு துறைகளில் காலியாக உள்ள 4.1/2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த எந்தவிதமான அறிவிப்பும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படாதது அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும்,தமிழக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையினை நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டுமென தமிழக முதல்வரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

அதைத்தொடர்ந்து எதிர்வரும் 16.08.2021 அன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்து நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews