சென்னை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான, மருத்துவ காப்பீடு திட்ட அரசாணைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான புதிய அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது. அதில், 'ஊழியர்களிடம் இருந்து மாதம்தோறும் 300 ரூபாய் பிரீமியம் பிடிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, ஊழியர்களிடமிருந்து பிடிக்கப்படும் தொகையில் இருந்தே, மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதாகவும், அரசு தரப்பில் இருந்து, எந்த பங்களிப்பும் இல்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் அறிக்கை:கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் நடைமுறைப்படியே, தி.மு.க., அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டமும் அமைந்துள்ளது. ஊழியர்களின் பிரீமிய தொகையில் இருந்தே, 'கார்பஸ்' நிதியை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது, தமிழக அரசு தங்கள் ஊழியர்களுக்காக, எந்த தொகையையும் பங்களிப்பு செய்யவில்லை.அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடுதிட்டத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசாணையை திருத்தி வெளியிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.