கர்நாடகா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தையும் ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்துள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாத அளவிற்கு கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு இருந்தது. தற்போது பல மாநிலங்களில் பாதிப்புகள் குறைந்து வருவதால் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகா மாநிலத்தில் பாதிப்புகளின் நிலைமை குறைந்து வருவதன் காரணமாக ஜூலை 26ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் உயர் வகுப்புகளின் கட்டம் வாரியாக தொடங்க இருப்பதாக பொது அறிவுறுத்தல் துறை (டிபிஐ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள், குழந்தை மருத்துவர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மாநில கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டாலும், முதலில் உயர் வகுப்பு மாணவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பகுதியாக பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அரசுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.