தமிழக அரசு வேலைவாய்ப்பு, 67,76,945 பேர் காத்திருப்பு – வெளியான தகவல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை அரசு பணிக்காக 67,76,945 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மற்றும் தங்களின் அனைத்து பட்டப் படிப்புகளையும் தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில், முன்னுரிமை அடிப்படையில் அரசு பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். தற்போது தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 2021 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 30 வரை 18 வயதிற்கு உட்பட 14,01,894 பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். 16,49,473 பேர் 19 முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 24,88,254 பேர் 24 முதல் 35 வயது வரை உள்ளவர்களும், 12,26,417 பேர் 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்றவர்களும், 58 வயதிற்கும் மேல் 10,907 பேரும் பதிவு செய்துள்ளனர். மேலும் ஜூன் 30ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதில் கை, கால் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆண்கள் 69,730 பேர் பெண்கள் 36,411 பேர் என மொத்தம் 106141 பேர் பதிவு செய்துள்ளனர். கண்பார்வை அற்றவர்களில் ஆண்கள் 11,380 பேரும், பெண்களில் 5,145 பேரும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களில் ஆண்கள் 9,412 பேரும், பெண்கள் 4,437 பேர் என மொத்தம் 13,849 பேர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் மொத்தம் 13,6515 பேர் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.