மதுரை 'எய்ம்ஸ்' மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 08, 2021

Comments:0

மதுரை 'எய்ம்ஸ்' மாணவர் சேர்க்கை

மதுரை:மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை தற்காலிக வளாகத்தில் எம்.பி.பி.எஸ்., வகுப்பு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை துவங்குவது குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை, அதலையைச் சேர்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம் முடியும் வரை, தற்காலிக வளாகத்தில் எய்ம்சை துவக்க வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை துவக்கி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.


வாரிய கூட்டம்

ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், 'எம்.பி.பி.எஸ்., வகுப்பு, வெளிநோயாளிகள் பிரிவை துவக்க மாற்று இடம் ஏற்பாடு செய்வது குறித்து, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பதில் மனு:மதுரை எய்ம்சில் எம்.பி.பி.எஸ்., படிப்பில், 150 மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக இடம் ஒதுக்க மத்திய அரசு மூன்று பரிந்துரைகள் அளித்துள்ளது. இது குறித்து ஆராய, இறுதி செய்ய எய்ம்ஸ் நிர்வாக வாரிய கூட் டம் ஜூலை 16ல் நடக்கிறது.அறிக்கை தாக்கல்அதில் மேற்கொள்ளப்படும் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன் பரிந்துரை குறித்த சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும்.

மதுரையில் எய்ம்ஸ் விரைவில் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு தெரிவித்துஇருந்தார்.நீதிபதிகள், 'எம்.பி.பி.எஸ்., வகுப்பு, வெளிநோயாளிகள் பிரிவு துவங்குவது குறித்து, கூட்டத்தில் மேற்கொண்ட முடிவு மற்றும் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசுத் தரப்பில், ஜூலை 26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews