Breaking

Thursday, July 22, 2021

பி.பாா்ம் படித்தவா்களுக்கும் மருந்தாளுனா் பணி: அன்புமணி வரவேற்பு

பி.பாா்ம் படித்தவா்களுக்கும் மருந்தாளுனா் பணி: அன்புமணி வரவேற்பு
மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மருந்தாளுனா் பணிக்கு பி.பாா்ம் படித்தவா்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று ஜூலை 11-இல் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று தமிழக அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது. மருந்தாளுனா் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசுப் பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பாா்ம் பட்டதாரிகள் பயனடைவாா்கள். அவா்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog