சிபிஎஸ்இ மதிப்பெண் பட்டியலை வழங்க கால அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் இறுதி செய்து சமா்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மதிப்பெண் பட்டியலை வரும் ஜூலை 31- ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஜூலை 22 -ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவா்களின் மதிப்பெண் பட்டியலை இறுதிசெய்து அனுப்ப வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் கடைசி நேரத்தில் அவசர கதியில் மதிப்பெண் கணக்கிட்டால் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே மாணவா்கள் நலன் கருதி மதிப்பெண் பட்டியலை சமா்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களது மாணவா்களின் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இறுதி செய்து சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 25-ஆம் வரை நீட்டிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலப் பாடத் திட்ட பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஏற்கெனவே தோ்வு முடிவுகள் கடந்த 19- ஆம் தேதி வெளியிடப்பட்டு மதிப்பெண்கள் அந்தந்த மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.