ATM, Credit கார்டுகளின் சேவை கட்டணம் உயர்வு – RBI திட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

ATM, Credit கார்டுகளின் சேவை கட்டணம் உயர்வு – RBI திட்டம்!

மொபைல் பேங்கிங் வழியாக பலரும் பண பரிமாற்ற சேவைகளை நிறைவேற்றி வரும் இக்காலகட்டத்தில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ATM மூலம் பணம் எடுப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி, சில கட்டணங்களை அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டண அறிவிப்பு
இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே பல வகையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதில் குறிப்பாக வங்கிகளில் பரிவர்த்தனை மேற்கொள்வதும் கூட இப்பொழுது வீடுகளில் இருந்தபடியே செய்யக்கூடிய அளவுக்கு எளிதாக மாறிவிட்டது. அதன் படி வங்கி பயனர்கள் பலரும் பயன்படுத்தும் மொபைல் பேங்கிங் சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ATM மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணங்கள் விதிக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் தனியார் மற்றும் பொது வங்கிகளின் ATM களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணங்களையும், பண பரிமாற்றக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள நிலையில், தற்பொழுது டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன் கீழ் ATM மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கி வாடிக்கையாளர்கள் அதனுடன் தொடர்புடைய வங்கி ATM களில் இருந்து மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் வரை மேற்கொள்ள முடியும்.

இதற்கு பின்னர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ரூ.21 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டண முறை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள படி, நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.17 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரூ.6 ஆகவும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த பரிமாற்றக் கட்டணம், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு செயல்பாட்டிற்காக வங்கிகளால் வசூலிக்கப்படும் கட்டணம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில், SBI வங்கி ஜூலை மாதம் முதல் தனது வாடிக்கையாளர்கள் ATM மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் மற்றும் சேவை கட்டணங்களை திருத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர் ஒருவர் மேற்கொள்ளும் இலவச வரம்புக்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் GST கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews