தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட மையங்களில் அதிவேக சுருக்கெழுத்து தேர்வு மையங்கள் அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுருக்கெழுத்து மையம்:
தமிழகத்தில் அரசு அனுமதியுடன் 3500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அந்த மையம் மூலமாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை, நீதித்துறைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதிவேக சுருக்கெழுத்து தேர்வு எழுத சென்னையில் மட்டுமே மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே வேலைவாய்ப்புகளுக்காக படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சென்னை வரை செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சென்னை வரை தனியாக மாணவிகள் செல்ல முடியாது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் வெகு தூரம் பயணம் செய்ய முடியாது என்பதால் இந்த தேர்வு மையத்தை மதுரை, கோவை மையங்களில் அமைக்க வேண்டும் என வைக்கப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த நீதிபதிகள் மதுரை, கோவையில் சுருக்கெழுத்து தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.