TNPSC MVI 113 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

TNPSC MVI 113 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அதனை ஒத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு:
தமிழத்தில் காலியாக 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் TNPSC இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு தேர்வர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத்தேர்வில் 1,328 பேர் தேர்வு எழுதிய நிலையில் அதில் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 113 காலிப்பணியிடங்களுக்கு 33 பேரை மட்டுமே அழைத்து அறிவிப்பு வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர். மேலும் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட 1328 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதி உடையவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் கடந்த முறை வெளியிட்ட அறிவிப்பில் நேர்முகத் தேர்வு ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ள 226 பேரில் பலருக்கு உரிய தகுதிகள் இல்லை. எனவே இது குறித்தும் மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக கருதுவதால், இந்த தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீட்டிக்க வேண்டும் எனவும், ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews