இந்த வங்கிகளின் IFSC குறியீடுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

இந்த வங்கிகளின் IFSC குறியீடுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த வங்கிகளின் IFSC குறியீடுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

சிறிய வங்கிகள் பல பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டதை அடுத்து, அவ்வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது IFSC கோடுகளை மாற்றம் செய்திருக்க வேண்டும். அதனால் பண பரிமாற்றம் செய்வதற்கு முன்பாக வங்கிகளின் IFSC குறித்த விவரங்களை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

புதிய IFSC கோடுகள்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய வங்கிகள் பலவற்றை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து வங்கிகளின் இணைப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் பண பரிமாற்றத்தின் போது சிறிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பழைய IFSC கோடுகளை இனி பயன்படுத்த முடியாது. இதனால் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் IFSC கோடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுவது அவசியமாகும். முதலில் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் பட்டியலின் படி: சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஓரியண்டல் வங்கி வர்த்தக, ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை அடங்கும். இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய IFSC கோடுகளை பயன்படுத்தி எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகளையும் மேற்கொள்ள முடியாது. அதற்காக புதிய குறியீடுகளை மாற்ற வேண்டும். ஆன்லைன் போர்டலில் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய IFSC குறியீடுகளுக்கு பதிவு செய்யலாம்.

அதாவது இவ்வகை பரிவர்த்தனைக்கு முதலில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை மீண்டும் சேர்க்க வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளின் கீழ் புதிய IFSC குறியீடுகளை உள்ளடக்கிய பயனர்களின் பெயர்கள், கணக்கு எண்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை சேர்ப்பதன் மூலம் IFSC குறியீடுகளை பெற்றுக்கொள்ளலாம். இவற்றில் பதிவு செய்த பின்பு தான், புதிதாக இணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பரிமாற்றத்தை செய்துகொள்ள முடியும். ஏதேனும் பரிமாற்றம் முன்னதாக நிறுத்தப்பட்டிருந்தால், அவை முதலில் நீக்கி விட்டு பின்னர் புதிய தகவல்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணைப்புக்குள்ளான வங்கிகளின் விவரத்தை பொருத்தளவில், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இரண்டும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வங்கிகளை இணைப்பது என்பது செலவுக் குறைப்பு நோக்கங்களுக்கு உதவுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews