தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்களின் வாரிசுகளுக்கான நிவாரணம் மற்றும் சலுகை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு சலுகை கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை மறுப்பு
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வாரிசுகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி நோய் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளுக்கு, ஒவ்வொருவர் பெயரிலும் 5 லட்ச ரூபாய் வைப்பீடு செய்யவும், அவர்களின் பட்டப்படிப்பு, விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும் என அறிவித்திருந்தது. இதற்கான வழிகாட்டு நடைமுறைகள் அரசாணையாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில், கொரோனவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் குறித்த தகவல்களை கணக்கீடு செய்ய வேண்டும் எனவும் அந்த தகவல்களை மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திடம் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைகள் இதுவரை தனியார் பள்ளிகளில் படித்து வரும் பட்சத்தில் அவர்களை அதே பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமரின் நிவாரண நிதி அல்லது மாநில அரசின் நிதியில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் எனவும், இந்த நிதியில் இருந்தே சீருடை, புத்தகங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தை நல அலுவலர், கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு பணியில் இருந்தால், அவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது என அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.