நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடு - நாள்: 08.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடு - நாள்: 08.06.2021

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீட்டுத் திட்டம் 2020-21-ன்கீழ், கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்!
செ.வெ.எண்.07
நாள்: 08.06.2021
பத்திரிக்கைச் செய்தி
கால்நடை பராமரிப்புத்துறை - நாமக்கல் மாவட்டம் கால்நடை காப்பீட்டுத் திட்டம் 2020-21 ஆம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்துதல்
2020-21ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 4900 குறியீடு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,000/ செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு வரை மானியத்துடன் காப்பீடு மேல் உள்ளவர்களுக்கு 50% மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70% மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் 2 1/2 வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews