Breaking

Saturday, May 29, 2021

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றார் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட பாபநாசம், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகள், கபிஸ்தலம், சுவாமிமலை, அம்மா பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இதனிடையே, பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது:
கல்வியை மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வருவோம் எனதேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளோம். முதலில் கரோனா தொற்று ஒழிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனிடையே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற் குச் சட்டரீதியான வேலையைச் செய்வோம் என முதல்வர் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக கரோனாவை கட்டுப்படுத்துவ தில்தான் முதல்வரின் முழுக்கவனமும் இருக்கிறது. கரோனா தொற்று படிப்படியாகக்குறையும் போது, கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான பணியையும் செய்வோம் என்றார் அமைச்சர். அப்போது, பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog