சென்னையில் தகுதியான இளைஞர்கள் கரோனா முன்கள பணியாளர்களுக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு முனகளப் பணியாளர்களுக்கான திறன் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்திட, திறன் பயிற்சி மையங்கள் மூலம் தகுதியுள்ள இளைஞர்களுக்கு பிரதம மந்திரி குஷால் விகாஷ் யோஜனா 3.0 திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், ஜெனரல் டூட்டி அசிஸ்டன்ட், ஜிடிஏ- அட்வான்ஸ்டு (கிரிடிக்கல் கேர்), ஹோம் ஹெல்த் எய்டு, மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டென்ட், பிலேபோடோமிஸ்ட் ஆகிய திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவற்றுக்கு கட்டணம் ஏதுமில்லை. குறைந்த பட்சம் 10-ம்வகுப்புக்கு மேல் படித்து முடித்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். விருப்பம் மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ‘ricentrenorthchennai@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு உதவிஇயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ‘வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்’ சென்னை-21 என்றமுகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், 044-25201163, கைபேசி எண் - 9080527737, 8778452515 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.