2008-09 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

2008-09 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

Recruitment-Order-for-Science-Graduate-Teachers-Selected-to-the-Department-of-School-Education-by-the-Teacher-Selection-Board-for-the-academic-year-2008-09%2521
2008-2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பார்வை 1ல் காணும் 05.01.2009 நாளிட்ட பள்ளிக் கல்வி இயக்ககச் செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு (10.2.3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் பட்டப்படிப்பு சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்திபணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள பார்வை 200 காணும் செயல்முறைகளின்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லைஎனவும் தெரிவிக்கலாகிறது. இந்நிலையில் பார்வை 3ல் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், கஸ்பா Aஆம்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திருமதி. எஸ். ஜான்சிசந்திரவதினி, என்பவர் சார்பான ஆவணங்களை பரிசீலனை செய்ததில் அன்னார் 06.01.2009ல் பணி நியமன ஆணை பெற்று 07.01.2009 அன்று பணியில் சேர்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது.எனவே மேற்குறிப்பிட்டவாறு 06.01.2009ல் நியமன ஆணை வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியருக்கும் நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு (10.2.3 முறையில் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மற்றும் பட்டப்படிப்பு சார்ந்த பாடத்திற்கு இணையானதாக இல்லாதவர்களைத் தவிர்த்து) அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி 31.05.2013ல் வழங்கப்பட்ட ஆணை பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.
IMG_20210506_140148
IMG_20210506_140200

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626430