அரசு பணியில் 100 சதவீதம் தமிழர்களை பணி அமர்த்த வேண்டும் - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

அரசு பணியில் 100 சதவீதம் தமிழர்களை பணி அமர்த்த வேண்டும் - ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

Capture
IMG_20210506_143212
அரசு பணியில் 100 சதவீ தம் தமிழர்களை பணி அமர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்ச ராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. சிறப்பு கூட்டம்: சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க காளையார்கோவில் கிளையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலை வர் ஆரோக்கிய பாஸ்கர் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ். இளங்கோ முன் னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் அலெக்சாண்டர் துரை வர வேற்றார். மாவட்ட ஒருங்கி ணைப்பா ஆரோக்கிய சாமி நோக்க உரையாற்றி னார். மாவட்ட சட்ட ஆலோசகர் மலைராஜ் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவ ரம் வருமாறு: 100 சதவீதம் தமிழர்கள்: தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி விட்டு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும். அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவ மாணவிகளின் கனவான மருத்துவ படிப்பிற்கு எதிராக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய தேசியக் கல்வி கொள்கையில் தமிழ்மொ ழிக்கு எதிராக உள்ளவற்றை நீக்கிடவும் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்திடவும், தமிழக அரசு பணியில் 100 சதவீதம்தமிழர்களை மட்டுமே பணிய மர்த்திட நடவடிக்கைவேண் டும். தொல்லியல் ஆய்வு: தமிழர்களின் கலாசாரத் திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கீழடி மற்றும் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தக்கரை இடங் களை தொல்லியல் துறை ஆய்வை மேம்படுத்தி தமிழர் களின் தொன்மையை உல கிற்கு பறைசாற்றிட வேண் டும். கொரோனா பெருந்தொற் றிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்திடவும் பிற மாநி லங்களுக்கு முன் மாதிரியாக | தமிழகம் திகழ வேண்டும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட் டன.கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த் துக்கள் தெரிவிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் நாக லிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84617309