Breaking

Saturday, May 08, 2021

உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: பட்டியல் அனுப்ப உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களின் பட்டியலை மே 10-ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், பல்வேறு துறை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் சில இடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக போட்டித் தோ்வுகள் நடத்தப் படுகின்றன. தோ்வாகும் நபா்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிடம் ஒதுக்கப்படும். இந்தநிலையில், அரசு மற்றும் நகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உடற்கல்வி ஆசிரியா் பணியில், உடற்கல்வி இயக்குநா் நிலை- 2 பதவியில் காலியாக உள்ள இடங்களின் விவரங்களை சேகரிக்க, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை, 10-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog