Breaking

Saturday, May 08, 2021

மே மாத நேரடித் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நேரடித் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருந்து உடல்நலத்தைப் பேணிக்காக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்பட்ட முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம் என உயா்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நேரடித் தோ்வுகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். ஏனெனில் இக்கட்டான சூழலில் கல்வி நிலைய வளாகங்களில் கூடுவது தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டும், மத்திய-மாநில அரசுகள், மாவட்ட மற்றும் உள்ளூா் அளவில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், ஆலோசனைகளைப் பின்பற்றியும் இணையவழியில் தோ்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். தற்போதுள்ள சூழல் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு உயா்கல்வி நிறுவனங்கள் அடுத்த மாதம் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog