Breaking

Saturday, May 01, 2021

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மேற்கு வங்க அரசு வெளியீடு!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிகளிலே தேர்வு எழுதுவர் என்று அம்மாநில பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல்:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் கடுமையான பொதுமுடக்க விதிகள் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றபட்டு வருகின்றது. அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வந்தனர். இப்படியாக இருக்க, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிகளில் பொதுத்தேர்வுகளை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் பிற்பகல் 12 மணி முதல் 3.15 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வு வெவ்வேறு பள்ளிகளில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை கொரோனா பரவல் எதிரொலியாக இவ்வாறாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2021 - TIME TABLE - PDF
இது மட்டும் அல்லாமல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog