சிற்பக் கலை இலவச பயிற்சி முகாம்
திருநெல்வேலி, ஏப். 11: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்தி ரம் குருவனத்தில் ஒருவார இலவச சிற்பக்கலை பயிற்சி முகாம் வரும் ஆம் தேதி தொடங்குகிறது
இதுகுறித்து திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் அம்பாசமுத்திரம் குருவனம் திறந்த நிலை அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒருவார சிற்பக்கலை இலவச பயிற்சி முகாம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அம்பாசமுத்திரம் குருவனத்தில் நடைபெற வுள்ளது
இதில் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இருபாலரும் பங்கேற் கலாம். இப்பயிற்சி தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியை சென்னை கவின் கலைக் கல் லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்துரு நடத்துகிறார். இதில், பங் கேற்க விருப்பமுள்ளவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் திருநெல்வேலி
அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட் சியர் சிவ.சத்திய வள்ளியை 94449 73246 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Monday, April 12, 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.