அண்ணா பல்கலை.யில் இணையவழியில் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 14, 2021

Comments:0

அண்ணா பல்கலை.யில் இணையவழியில் செமஸ்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேரின் முடிவு நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் தேர்வு எழுதிய சுமார் ஒரு லட் சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. அவர்களில் 30 ஆயிரம் பேர் முறை கேட்டில் ஈடுபட்டிருப்பதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
வருங்கால வைப்பு நிதி சேவை ஆன்லைனில் பயன்படுத்த அறிவுறுத்தல்
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மாணவர்களின் பாது காப்பையும், அவர்களின் கல்வியையும் கருத்தில்கொண்டு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய பொறி யியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது. கரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கிய நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு களை கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங் களில் இணையவழியில் நடத்தியது. 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் முதல் ஆண்டு நீங்கலாக 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 11-ம் தேதி இணையதளத்தில் வெளி யிட்டது. பலரது முடிவுகளில் தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும் விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா!
மாணவர்கள் பலர் முறைகேட் டில் ஈடுபட்டதால்தான் முடிவுகளில் ‘நிறுத்திவைப்பு' என குறிப்பிட்டுள்ள தாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்வு முடிவில் WH1 என்று குறிப்பிடப்பட் டிருந்தால் முறைகேட்டில் ஈடுபட்டதாக அர்த்தமாகும். அதேபோல WH6 என் பதற்கு முறைகேட்டில் ஈடுபடவில்லை என்ற ‘தெளிவு’ வேண்டும் என்றும், WHRX என்பதற்கு மறுதேர்வு நடத்தப் படும் என்றும் அர்த்தம். அதன்படி, சுமார் 31 காரணங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இதுதொடர்பாக அண்ணா பல் கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக பொறி யியல் மாணவர்களுக்கு இணையவழி யில் 60 மதிப்பெண்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, தலா 2 மதிப்பெண்கள் கொண்ட 15 கேள்வி களும், ஒரு மதிப்பெண் கொண்ட 30 கேள்விகளும் கேட்கப்பட்டன.
வருங்கால வைப்பு நிதி சேவை ஆன்லைனில் பயன்படுத்த அறிவுறுத்தல்
தேர்வு எழுதும் மாணவர்கள் தலையை அசைக்கக் கூடாது, அறை யில் எவ்வித சத்தமும் கேட்கக் கூடாது, மாணவர்களின் அருகில் யாரும் இருக் கக் கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப் பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறை களை சரியாக பின்பற்றாதது, தேர்வு முறைகேடாக கருதப்படும். தேர்வு எழுதிய மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி தரப்பிலும், அண்ணா பல் கலைக்கழகம் தரப்பிலும் கண்காணிக் கப்பட்டனர். அந்த வகையில், சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா!
இதுதவிர, தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், முறைகேட் டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படு பவர்கள் போன்ற காரணங்களால் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பொறியியல் மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘லட்சக்கணக்கான மாண வர்கள் செல்போனில்தான் எழுதினர். கல்லூரிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்துதான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வீட்டில் வழக்க மான சத்தம் எழுந்தாலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக கருதி தேர்வு தளத்தில் எச்சரிக்கை வந்தது. கிராமப்புற மாண வர்கள் பலருக்கு தேர்வு எழுத வீட்டில் தனி அறை இருந்திருக்காது. அந்த வீட்டில் பெற்றோர் அருகே வந்தாலும் முறைகேடு எச்சரிக்கை எழுந்தது.
வருங்கால வைப்பு நிதி சேவை ஆன்லைனில் பயன்படுத்த அறிவுறுத்தல்
ஒருசில மாணவர்கள் வேண்டு மானால் முறைகேட்டில் ஈடுபட்டு இருக் கலாம். ஆனால், இவ்வளவு பெரிய எண் ணிக்கையிலான மாணவர்கள் முறை கேட்டில் ஈடுபட வாய்ப்பே கிடையாது. எல்லா மாணவர்களையும் தவறாக கருதுவது மிகுந்த வேதனை அளிக் கிறது. எனவே, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews