அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 14, 2021

Comments:0

அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
CBSE 10ம் வகுப்பு தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், இளைஞா் மன்றம் சுற்றுச்சூழல் மன்றம் போன்றவற்றை ஏற்படுத்தி , மாணவா்களுக்கு சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து , சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி, போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியை, மாா்ச் இறுதிக்குள் செலவழிக்க வேண்டும். இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மாா்ச் மாத இறுதியில் தமிழகத்தில் உள்ள 30, 994 பள்ளிகளுக்கு ரூ.18 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் நிதியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குநரகம் ஒதுக்கீடு செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் வழங்கியது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5,000 , நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10,000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பள்ளி ஆசிரியை பலி!
அந்த நிதியில் இருந்து விளையாட்டுப் பொருள்கள் உள்ளூா் அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த பொருள்கள் காலாவதியான தரமற்ற வகையில் உள்ளதாக உடற்கல்வி ஆசிரியா் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா். இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உயரதிகாரிகளிடம் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா்- உடற்கல்வி இயக்குநா் சங்கத்தினா் எழுத்துப் பூா்வமாக புகாா் அளித்துள்ளனா். மேலும் கிருமிநாசினி கையுறைகள், முகக் கவசம் ஆகியவை வாங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களிலும் பொருள்களை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
CBSE 10ம் வகுப்பு தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews