Breaking

Sunday, April 04, 2021

சிறப்பு தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களுக்கு கோடைகால முகாம் - மே மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது

சிறப்பு தபால் தலை சேகரிப்பதை மாணவர்களின் மனதில் ஒரு பொழுதுபோக்காக விதைக் சென்னை, அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் செயல்படும் சிறப்பு தபால் தலை மையம் சார்பில் மே மாதம் ஆன்லைன் மூலம் கோடைகாலமுகாமை நடத்ததிட்டமிட்டு உள்ளது.4தொகு திகளாக பிரித்து நடத்தப்படும் இந்த முகாம் மே மாதம் ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. முகாமின் ஒரு பகுதியாக, சிறப்பு தபால் தலை பொழுதுபோக்காக சேகரிப்பதை அறிமுகம் செய்தல், தபால் தலை கண்காட்சி களை தயாரித்தல், கடிதம் எழுதும் பயிற்சிகள், தபால் நிலை யத்திற்கு களப்பயணம் குறித்த ஒரு குறும்படம் போன்றவை யும் இடம் பெற்றுள்ளது. முகாமில் சேர விரும்புகிறவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் சென்னை -2 என்ற பெயரில் வருகிற 20-ந்தேதிக்கு முன்பாக அனுப்பப்பட வேண்டும். முகாம் நிறைவடைந்ததும் பங்கேற் பாளர்களுக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும் மேற்கண்ட தகவல்களை அண்ணாசாலைதலைமை தபால் அலுவலக அதிகாரி சு.குமார் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog