தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது
சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் தபால் வாக்குகள் செலுத்துவதில் அவசரம் காட்டினால், தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் அச்சம் தெரிவித்தது. தபால் மூலம் வாக்களிக்க, வாக்கு எண்ணிக்கை தினமான மே 2 காலை 8 மணி வரை கால அவகாசம் உள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. எனவே தபால் வாக்கு செலுத்தும் வழிமுறைகளை பின்பற்றாமல், அவசரமாக வாக்களிப்பதால் செல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில், சட்டசபை தோதலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளைச் செலுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும், அப்பிரச்சனைக்கு தோதல் ஆணையம் தீர்வுகாணவேண்டும் என்றும் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது தொடர்பாக சென்னையில் தமிழக தலைமைத் தோதல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Search This Blog
Sunday, April 04, 2021
Comments:0
Home
ELECTION
GOVT EMPLOYEE
தபால் வாக்குகள் செலுத்துவதில் அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்
தபால் வாக்குகள் செலுத்துவதில் அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.