அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்கள், கட்சி வேலைக்காக வகுப்புகளை, 'கட்' அடித்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் இடங்கள் - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ள நிலையில், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு என, பல்வேறு பணிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர், சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக உள்ளனர்; அரசியல் கட்சிக்கு ஆதரவான சங்கங்களையும் நடத்தி வருகின்றனர்.
கூட்டுறவு - பொது நகைக் கடன்கள் - கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோரி கூட்டுறவுத் துறை உத்தரவு
கட்சிகளுடன் தொடர்பு உடைய ஆசிரியர்கள், தங்களுக்கு தெரிந்த அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து, கட்சி வேலைகளில் ஈடுபடுவதாகவும், அதற்காக பள்ளி வகுப்பு நேரத்தை, 'கட்' அடிப்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பாதிப்பால், நடப்பு கல்வி ஆண்டில், ஏழு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டில், அடிப்படை கல்வி தெரியாமல் பாதித்து விடக் கூடாது என்பதற்காக, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல ஆசிரியர்கள், பெரும்பாலான நாட்களில் தங்கள் சம்பளம், விடுப்பு தொடர்பான பிரச்னைகளை கூறி, போராட்டம், ஸ்டிரைக் என ஈடுபடுகின்றனர்.
தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் இடங்கள் - முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை
இந்த கல்வி ஆண்டில் குறைந்த நாட்களே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், அதிலாவது தங்களை நம்பி பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, வகுப்புகளை, 'கட்' அடிக்காமல், பாடம் கற்றுத் தர வேண்டும். மாறாக, அரசியல் கட்சியினரோடு சேர்ந்து, வகுப்புக்களை புறக்கணித்து விட்டு, கட்சி வேலைகளுக்கு சென்றால், அவர்கள் மீது பணியாளர் விதிகளின் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். இதற்கான அறிவுறுத்தல்களை, தலைமை ஆசிரியர்கள் வழியே கூறியிருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.