Breaking

Thursday, March 04, 2021

திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
பரீட்சைக்கு பயமேன் (Pariksha Pe Charcha) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தமிழில் - PDF
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மறுநாளே தேர்வு பணியில் பங்கேற்கும் நிலை உள்ளது. இன்நிலையில் திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல். திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே. 2-ல் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையில் பள்ளி கல்வித்துறை இதனை தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. IFHRMS - Presentation of bills for the month of march 2021- New instruction
அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறுகிறது. IFHRMS - Presentation of bills for the month of march 2021- New instruction
இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்து வந்தன. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை என்றும் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog