Breaking

Tuesday, March 02, 2021

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் மீது திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டின் இன்றைய உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி திமுக, அதிமுக, தமிழக அரசு, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குனர், மத்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இறுதி செய்ய வேண்டும்.மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
IGNOU - மாணவர் சேர்க்கை ஜனவரி 2021: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என கூறி எம்.பி-யும், திமுக செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை செயலர் அமைத்த குழுவில், தமிழக சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோரை சேர்க்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
IGNOU Common Prospectus - PDF
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய - மாநில சுகாதார துறை செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog