ஐஏஎஸ், ஐ.பி.எஸ். மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு - தமிழகத்தில் 153 பேர் வெற்றி பெற்று சாதனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 24, 2021

Comments:0

ஐஏஎஸ், ஐ.பி.எஸ். மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு - தமிழகத்தில் 153 பேர் வெற்றி பெற்று சாதனை!

ஐஏஎஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ரிசல்ட் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 2,047 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 153 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். இதில், சுமார் 4.5 லட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி நடந்தது. இந்த முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் சுமார் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 603 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஜனவரி 8, 9, 10 மற்றும் 16, 17 ஆகிய 5 நாட்கள் நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று இரவு வெளியிட்டது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வை இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் 2047 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அக்டாமியின் சென்னை பயிற்சி மையத்தில் 117 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பெங்களூர், திருவனந்தபுரம் பயிற்சி மையத்தில் பயற்சி பெற்ற 387 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நேர்முக தேர்வுக்கு www.upsconline.nic.inல் என்ற இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தில் தனியே 25ம் தேதி(நாளை) முதல் ஏப்ரல் 5ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தேதியில் இருந்து நேர்காணல் தொடங்கும். இதில் தேர்ச்சி பெறுவோர் அவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து அதன் பிறகு தெரிய வரும். பதவிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews