கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 19, 2021

1 Comments

கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்

அரசு கல்லுாரிகளில் உள்ள, 1,661 கவுரவ விரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்றுடன் முடிந்தது. தமிழகத்தில் உள்ள, 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, பணி வரன்முறை என்ற பெயரில், பணி நிரந்தரம் செய்ய, உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிப்.,20ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஐந்து ஆண்டு பணி அனுபவம் மற்றும் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் தகுதி பெற்றவர்களை, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பில் உள்ள ராமலட்சுமி மேற்பார்வையில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று முடிந்தது. விரைவில், பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

1 comment:

  1. In government colleges more than 4000 Guest Lectures are working now

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews