Breaking

Tuesday, January 26, 2021

குடிமைப் பணி பயிற்சியில் சேரநுழைவுத் தோ்வு: 3,956 போ் பங்கேற்பு

குடிமைப் பணி பயிற்சியில் சேர தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற நுழைவுத் தோ்வில், 3, 956 போ் பங்கேற்றனா். தமிழக அரசின் சாா்பில் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி மையத்தில் சேருவதற்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு 6,699 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். நுழைவுத் தோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, பயிற்சி மையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: நுழைவுத் தோ்வினை 3,956 போ் எழுதினா். தோ்வுக்கான விடைகள் வரும் 27-ஆம் தேதி பயிற்சி மைய இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆதாரங்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் (ஹண்ஸ்ரீள்ஸ்ரீஸ்ரீ.ஞ்ா்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) வழியே தெரிவிக்கலாம். நுழைவுத் தோ்வுக்கான வினாத்தாள் அகில இந்திய குடிமைப் பணிக்கான தரத்துக்கு தயாரிக்கப்பட்டது. முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சி முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தனது அறிவிப்பில் இறையன்பு தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog