யோகா மருத்துவ படிப்பு வரும் 7ல் கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 03, 2021

Comments:0

யோகா மருத்துவ படிப்பு வரும் 7ல் கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும், 7ம் தேதி துவங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரும்பாக்கம் அரசு கல்லுாரியில், 60 இடங்கள்; 17 தனியார் கல்லுாரிகளில், 1,053 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்உள்ளன. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில், 2,002 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை, வரும், 7 முதல், 12ம் தேதி வரை, சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், நண்பகல் முதல், பொது பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும். மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews