அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 19, 2021

Comments:0

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை

அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.
இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்கள் , வீடு கட்டும் முன்பணம் பெற்று தமிழ்நாட்டில் வீடு கட்ட உத்தேசித்தால் , அவ்வூழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews