Breaking

Wednesday, December 23, 2020

'போலி ரீபண்ட்' எஸ்.எம்.எஸ்., வருமான வரித் துறை எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செலுத்திய வரித்தொகையை, திரும்ப பெறுவது தொடர்பாக, போலியாக வரும், 'ரீபண்ட்' எஸ்.எம்.எஸ்., தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என, வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பை மீறும், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வூதியர்கள், ஆண்டு தோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.அதேபோல, மாத ஊதியம் பெறுவோரிடம் இருந்து, குறிப்பிட்ட தொகை, டி.டி.எஸ்., ஆக பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடிக்கப்படும் தொகையை, கணக்கு தாக்கல் செய்த பின், திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு, செலுத்திய தொகையை திரும்ப பெறுவது தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு போலியான தகவல்களுடன், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அதை நம்பி ஏமாற வேண்டாம் என, வரித் துறை எச்சரித்து உள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை தரப்பில் கூறியதாவது:வருமான வரி செலுத்துவோருக்கு, போலியான தகவல்களுடன், எஸ்.எம்.எஸ்., வருகிறது. அதில், 'குறிப்பிட்ட தொகை, உங்களுக்கு வருமான வரி ரீபண்ட்டாக அனுப்ப, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு, கீழே குறிப்பிட்டுள்ள இணைப்புக்குள் நுழைந்து, ரீபண்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்' என, தெரிவிக்கப்படுகிறது. அதுபோன்ற தகவல்கள்வந்தால், அந்த இணைப்புக்குள் செல்ல வேண்டாம். வருமான வரித் துறை சார்பில், அது போன்ற தகவல்கள் அனுப்பப்படுவதில்லை. ரீபண்ட் தொடர்பான நடவடிக்கைகளை, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog