Breaking

Thursday, November 19, 2020

“கற்போம் எழுதுவோம் இயக்கம்” புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - கற்போர் மையம் துவங்குதல் - சார்பு - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ந.க எண். 743 /ஆ3/2020, நாள்: 19.11.2020
பொருள் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06 “கற்போம் எழுதுவோம் இயக்கம்” புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - கற்போர் மையம் துவங்குதல் - சார்பு.
பார்வை 1.மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறை கடித எண். No9-3/2020- NLM.1,
நாள் : 08.05.2020,30.09.2020,14.10.2020 2.இவ்வியக்கக கடித ந.க.எண் 743/ஆ3/2020 நாள்-22.10.2020
பார்வை (1) இல் காணும் மத்திய அரசு கடிதத்திற்கிணங்க 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு கற்போம் எழுதுவோம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தினை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட 23.11.2020 முதல் கற்போர் மையங்கள் துவங்கி நடத்திட வேண்டுமென பார்வை (2) இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிர்வாக காரணங்கள் முன்னிட்டு கற்போர் மையங்கள் 23.11.2020-ல் தொடங்குவதற்கு பதிலாக 30.11.2020 அன்று முதல் துவங்கப்பட்டு தொடர்ந்து நடத்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கற்போர் மையத்தின் கற்பித்தல் செயல்பாடுகளுக்கான கால அட்டவனை இத்துடன் இணைத்தனுப்பலாகிறது. இயக்குநர்
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-6.
நகல் பணிந்து சமர்பிக்கப்படுகிறது
1. அரசு முதன்மைச் செயலர்
பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகம், சென்னை-09.
2. மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் (TNLMA)
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சென்னை-06.
நகல் கனிவுடன் அனுப்பப்படுகிறது
1. இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-06.
2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-06.
3. இயக்குநர், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-06.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog