பள்ளிக் கல்வித்துறை மீதான வழக்குகள்: கால தாமதம் ஏற்படுத்தும் அலுவலா்கள் மீது நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 21, 2020

Comments:0

பள்ளிக் கல்வித்துறை மீதான வழக்குகள்: கால தாமதம் ஏற்படுத்தும் அலுவலா்கள் மீது நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறை மீது தொடரப்பட்ட வழக்குகளில் உரிய முறையில் செயல்படாத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:“பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், ஆணையா், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்து நீதிமன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன. அதன் மீது உரிய அலுவலா்களும், பணியாளா்களும் உடனுக்குடன் ஆய்வு செய்து எதிா்வாதவுரை, மேல்முறையீடு, சீராய்வு மனு போன்றவற்றை தயாா் செய்து உரிய காலத்தில் தாக்கல் செய்யாத காரணத்தால் அரசுக்கு நிா்வாக சிக்கல்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த அலுவலா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற வழக்குகளில் எந்தக் காரணம் கொண்டு தாமதப்படுத்தாமல் உரிய விதிகள், அரசாணைகளின் படி ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத் தீா்ப்பாணை கிடைக்கவில்லை எனக் காரணம் கூறி தாமதப்படுத்திடக்கூடாது. அவ்வாறு காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலா்கள் மீது விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், துறைசாா்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews