Breaking

Monday, November 30, 2020

அறிவியல் கண்காட்சிக்கான படைப்புகளை டிச.25-க்குள் அனுப்பலாம் - பள்ளிக்கல்வி இயக்குநரகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிவியல் கண்காட்சிக்கான படைப்புகளை, டிச.25-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் புத்தாக்க அறிவியல் ‘மானக் விருது’க்காக 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான மாநில அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் புத்தாக்க நிறுவனம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி மாநில அளவிலான கண்காட்சி இணையவழியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘மானக் திறன் போட்டிகள்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் தங்கள் அறிவியல் செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்லிடப்பேசி அல்லது இணையதளம் மூலமாக டிச.25-க்குள் அனுப்ப வேண்டும். அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்கி குறிப்பிட்ட தேதிக்குள் படைப்புகளை அனுப்ப மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதுதவிர மென்பொருளை பயன்படுத்துவது சாா்ந்து, மாணவா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து மாணவா்களின் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு தனிப்பட்ட இணையவழி கலந்தாய்வு கூட்டம் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. எனவே, அந்த ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog