'நெட்' தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 27, 2020

Comments:0

'நெட்' தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அண்ணா பல்கலையில், பேராசிரியர் மற்றும் நுாலகர் பணிக்கு, 'நெட்' தேர்ச்சி பெற்றவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, 'நெட், செட்' சங்கம் சார்பில், அதன் செயலர் தங்க முனியாண்டி, அண்ணா பல்கலைக்கு அனுப்பியுள்ள கடிதம்:அண்ணா பல்கலையில், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி நுாலகர், துணை நுாலகர், பல்கலை நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. நியமிக்க வேண்டும்இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அடிப்படை இளநிலை, முதுநிலை கல்வித் தகுதியில், 55 சதவீத தேர்ச்சியுடன், பிஎச்.டி., முடித்தவர்களாக இருப்பது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவுப்படி, நெட் என்ற தேசிய தகுதித் தேர்வு முடித்தவர்களையே நியமிக்க வேண்டும்.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பணி கிடைக்காத வகையில், பிஎச்.டி.,யை மட்டும் கட்டாயமாக்கி, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படிப்புக்கு, நெட் தகுதித் தேர்வு இல்லை என்பதால், பிஎச்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற பாடப் பிரிவுகளில், உதவி பேராசிரியர் மற்றும் நுாலகர் பதவிகளில் சேர, நெட் தகுதித் தேர்வு உள்ளதால், அதை அமல்படுத்த வேண்டும். வெளியிட வேண்டும்உதவி பேராசிரியர் மற்றும் பல்கலை நுாலகர் உள்ளிட்ட பதவிகளுக்கு, நெட் தகுதி வேண்டும் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.எனவே, அண்ணா பல்கலை அறிவித்துள்ள பணிகளுக்கு, நெட் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews