Breaking

Tuesday, October 27, 2020

அரசு பள்ளியில் விருந்து நிகழ்ச்சி தலைமை ஆசிரியையால் சர்ச்சை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர் சேர்க்கை மட்டும் நடந்து வருகிறது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, சின்னத்திருப்பதியில், புதுார் காருவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.இங்கு, நேற்று காலை, 9:00 மணியளவில், விருந்து பரிமாறப்பட்டு, பலர் சாப்பிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாத நிலையில், மண்டபம் போல், 30க்கும் மேற்பட்ட நபர்கள், விருந்து சாப்பிட்டது குறித்து தகவல் பரவியது. பாப்பிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கஸ்துாரி, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்துள்ளார்.அவர் கொண்டு வந்த உணவை, உறவினர்களுக்கு கோவில் வளாகத்தில் வழங்க, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், புதுார் கருவள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், உறவினர்களுக்கு உணவு பரிமாறியுள்ளனர்.விஜய தசமி நாளில், மாணவர் சேர்க்கைக்காக திறக்கப்பட்ட பள்ளியில், தலைமை ஆசிரியை, விருந்து நிகழ்ச்சி நடத்தியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி, காடையாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் அமலா கூறுகையில், ''இது குறித்து, முழுமையாக விசாரிக்கப்படும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog