Breaking

Tuesday, October 27, 2020

மாவட்ட, மாநகர ஆயுத படைக்கு விண்ணப்பிக்க டி.ஜி.பி., அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக போலீஸ் பட்டாலியனில் இருந்து, மாவட்ட, மாநகர, சிறப்பு பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க, டி.ஜி,பி., திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து, அவர் விடுத்துள்ள சுற்றறிக்கை:தமிழக போலீஸ் பயிற்சி பள்ளிகளில், பயிற்சி பெற்று வரும், 5,408 பேருக்கான பயிற்சி, 2021 ஜன., 2ல் முடிகிறது. பயிற்சியை முடிக்கும் இவர்களுக்கு, பட்டாலியனில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்களின் வருகையை அடுத்து, அதே அளவு போலீசாரை, பட்டாலியனில் இருந்து மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகள்பட்டாலியன் பணி முடித்த போலீசார், தாங்கள் விரும்பும், மாவட்ட, மாநகர போலீஸ் ஆயுதப்படையில் பணியாற்றுவதற்கான விருப்ப மனுக்களை, தங்களின் பட்டாலியன் எஸ்.பி.,க்கள் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். பெறப்படும் விருப்ப மனுக்களில் இருந்து, பணி மூப்பு அடிப்படையில்,மாவட்ட, மாநகர ஆயுதப்படையில் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog