DGE - எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு | பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 தேர்வு நடத்துதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி - நாள். 17.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 18, 2020

Comments:0

DGE - எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு | பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 தேர்வு நடத்துதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி - நாள். 17.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனுப்புநர்
முனைவர்.சி.உஷாராணி,

எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி.
ந.க.எண்.020377 / எப் /2020
நாள். 17.09.2020

ஐயா / அம்மையீர்,
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு | பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 தேர்வு நடத்துதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

பார்வை:
1. அரசாணை (நிலை) எண்.438, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (DM.IV) துறை, நாள்.24.08.2020 .
2. இதே எண்ணிட்ட இவ்வலுவலகக் கடிதம், நாள்.08.09.2020 பார்வை 1-ல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் (Standard operating procedures) பின்பற்றி, செப்டம்பர் / அக்டோபர் 2020 மாதங்களில் எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு | பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளை நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் இவ்வலுவலகக் கடிதம் வாயிலாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், மேற்குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துதல் தொடர்பாக பின்வருமாறு வழங்கப்படும் கூடுதல் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்க வேண்டிய கூடுதல் அறிவுரைகள்
1. தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.
2. தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய ஆரோக்கியம் குறித்த சுய உறுதிமொழியினை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
3. தேர்வு மையத்தில் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு கூட்டம் நடத்துதல், தேர்விற்கு முன்னர் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்களை வழங்குதல் மற்றும் தேர்வு முடிவடைந்த பின் அறைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து விடைத்தாட்களை பெறுதல் போன்ற பணிகளின் போது கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்றப்படுதல் வேண்டும்.
4. தேர்வு மையத்திற்கு முகக் கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு முகக் கவசம் வழங்குதல் வேண்டும். அதற்கு ஏதுவாக, தேர்வு மையங்களில் கூடுதலாக முகக்கவசங்களை வைத்திருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
5. தேர்வர்கள் கையுறை அணிந்து தேர்வெழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கலாம்.
6. தேர்வர்கள் தங்களுடன் கைக்கிருமி நாசினி (Hand Sanitizer) எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
7. தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் (Transparent Water Bottle only) எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
8. தேர்வு முடிவடைந்த பின்பு தேர்வர்களை போதிய இடைவெளியுடன் தேர்வு மையத்தை விட்டு அனுப்பி
வைக்கும் பணியினை, துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் மேற்கொள்ளுதல் வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு / பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒம்/-
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
நகல்:
1. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews