''மகிழ்ச்சியோடு தேர்வுகளை எதிர்கொள்ளவும், மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கவும் பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:'நீட்' தேர்வுக்காக மொத்தம், 7,417 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நீட் தேர்வு என்பது, தமிழகத்தில் இருக்கக் கூடாது. இத்தேர்வில், தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், முதல்வரின் விருப்பம். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இது குறித்து, சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது, அதற்கான விளக்கத்தை, சுகாதாரத் துறை அமைச்சரும், முதல்வரும் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளனர்.
தேர்வு என்றாலே, அச்சப்படும் மாணவர்கள் உள்ளனர். அந்த அச்சத்தை போக்கவும், மகிழ்ச்சியோடு தேர்வுகளை எதிர்கொள்ளவும், மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups