பல ஆண்டுகளாக, 'அரியர்' வைத்திருந்த மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கிய விவகாரத்தில், புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.மேலும், ஏப்ரல், மே செமஸ்டர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியிருந்த, அரியர் உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அனைத்து அரியர் பாடங்களுக்கும், ஆல் பாஸ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கையில், 'அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்காமல், ஆல் பாஸ் செய்தது, மிகவும் ஆபத்தான விஷயம். கல்வி தரத்தையும், தொழில் நிறுவன செயல்பாடுகளையும் பாதிக்கும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்பில் பல ஆண்டுகளாக, அரியர் வைத்துள்ள மாணவர் களுக்கு தேர்வை ரத்து செய்து, 'ஆல் பாஸ்' வழங்குவது, விதிமுறைகளுக்கு முரணான செயல் என்று, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.எனவே, 'அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது' என, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா அறிவித்துள்ளார்.இந்த விவகாரம், தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம் ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்ட எச்சரிக்கையில், 'தேர்வு இன்றி, ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்காது. உயர் படிப்புகளில் சேர முடியாது' என்றும் கூறப்பட்டுள்ளது.எனவே, இந்த விவகாரம், கல்வியாளர் கள், மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், 'ஏ.ஐ.சி.டி.இ.,யின் கடிதம் கிடைக்கவில்லை' என, உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், மாணவர்களை பாதிக்காத வகையில், தீர்வு காண வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups