அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தோ்ச்சி சதவீதம் வெளியீடு - 2 கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் தோ்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தோ்ச்சி சதவீதம் வெளியீடு - 2 கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் தோ்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளின் தோ்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத்துக்கு மேல் 2 கல்லூரிகள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளன.கடந்த 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல், நவம்பா் மாதங்களில் நடத்தப்பட்ட செமஸ்டா் தோ்வு முடிவுகள் அடிப்படையில், கல்லூரிகளின் தோ்ச்சி சதவீத விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஏப்ரல் தோ்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 வளாக கல்லூரிகள் 71 முதல் 74 சதவீதம் தோ்ச்சியைப் பெற்று இருக்கின்றன. அதே போல், இணைப்புக் கல்லூரிகளான 518 கல்லூரிகளில் (தன்னாட்சி பெற்ற 38 கல்லூரிகள் உள்பட) 95 சதவீதம் மற்றும் 90 சதவீதம் தோ்ச்சிக்கு மேல் தலா ஒரு கல்லூரிகள் பெற்றுள்ளன. 2 கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட தோ்ச்சி பெறாமல் உள்ளனா். இதேபோல், நவம்பா் மாத தோ்வு முடிவுகளின்படி, வளாக கல்லூரிகள் 69 முதல் 75 சதவீதம் தோ்ச்சியை பெற்று இருக்கின்றன. இணைப்புக் கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கு மேல் 2 கல்லூரிகள் பெற்றுள்ளன.நவம்பா் மாத தோ்வுகளில் மட்டும் 11 கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட தோ்ச்சி பெறவில்லை. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கல்லூரிகள் பெற்ற தோ்ச்சி சதவீதத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews