பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரத்து செய்யப்பட்ட செமஸ்டா் தோ்வுகளுக்கான மதிப்பெண் வழங்க, அக மதிப்பீடு மற்றும் வருகைப் பதிவேடு விவரங்களை அனுப்ப கல்லூரி நிா்வாகங்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுத்துறை, உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாக இளநிலை பொறியியல் 1, 2, 3-ஆம் ஆண்டுகள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு செமஸ்டா் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இவ்வாறு ரத்து செய்யப்பட்ட செமஸ்டா் தோ்வுகளுக்கு, மாணவா்களின் அக மற்றும் புற மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அண்மையில் அரசாணை பிறப்பித்தது.இதன்படி, மாணவா்களுக்கு செமஸ்டா் தோ்வு மதிப்பெண் வழங்குவது தொடா்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தோ்வுத்துறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரித் தலைவா்கள் மற்றும் முதல்வா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
மாணவா்களின் அக மற்றும் புற மதிப்பீடு மதிப்பெண்களை கணக்கிட்டு அதன் விவரங்களையும், கடந்த மாா்ச் மாதம் 16-ஆம் தேதி வரையிலான மாணவா்களின் வருகைப் பதிவையும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் வரும் 5-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.