Breaking

Monday, August 10, 2020

பருவத் தேர்வுகளை எழுதாதவர்களும் பாஸ்: 100% தேர்ச்சி அளித்த கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு காரணங்களால், பள்ளியில் பருவத் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்து, 10-ம் வகுப்பில் 100% தேர்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,39,829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே உடல்நிலை, மருத்துவ விடுப்பு மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாணவர்கள் தங்களின் பருவத் தேர்வுகளை எழுதவில்லை. அதேபோல ஏராளமான மாணவர்கள் பருவத் தேர்வுகளின் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வில் தேர்ச்சி அளிக்கப்படாது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பருவத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்து, 10-ம் வகுப்பில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog