DSE -பள்ளிக்கல்வி - 12ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அனுப்புதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

DSE -பள்ளிக்கல்வி - 12ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அனுப்புதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6 முன்னிலை:முனைவர் ச.கண்ணப்பன் ந க.எண்,2345 3/பிடி2/இ1/2020 நாள். 31.7.2020. பொருள் பள்ளிக்கல்வி-12ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த 297 காணொளிகள் பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் அனுப்புதல்- சார்ந்து. CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF பார்வை அரசாணை நிலை எண் 344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (DMII) துறை நாள் 10.07.2020 பார்வையில் கண்ட அரசாணையில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை(SOP) பின்பற்றிவழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க,தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ், 12ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு முதல் கட்டமாக 136 காணொளிகள் HiTech lab மூலம் இணையதளம் வழியே அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கள் மடிக்கணினி மூலம் பாடங்களை ஆசிரியர்கள் உதவியுடன் கற்று வருகின்றனர்.
CLICK HERE TO DOWNLOAD PDF இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் (Video lessons) தயார் நிலையில் உள்ளது. காணொளிகள் எண்ணிக்கை பாடம்வாரியாக கீழ்காணும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த காணொளிகள் அனைத்தையும் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இணையதள முகவரி tiny.cc/veetupalli வழங்கப்படுகிறது. இந்த இணைய முகவரியின் மூலம் அனனத்து காணொளிகளையும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் கணினி அல்லது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF 1. கணினி அல்லது மடிக்கணினியை இணையதளதில் இணைக்கவும் (குறைந்தது 10 mbps இணையதள வேகம் இருத்தல் நன்று)
2. Chrome browser மூலம் tiny.cc/veetupalli இணையதள முகவரியில் உள்நுழையவும்.
3. பாடம்வாரியான folders பட்டியலிடப்பட்டிருப்பதை காண முடியும்.
4. பாடத்தின் பெயரின்மேல் Arrow வைத்து, 'Download' தெரிவு செய்யவும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள காணொளிகளை தங்கள் கணினிக்கு பதிவிறக்கம் செய்யப்படும்.
6. ஒரு பாடத்தின் காணொளிகள் அனைத்தும் சரியாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதனை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புறையைத் திறந்து உறுதி செய்து கொள்ளவும்.
7. இவ்வாறு ஒவ்வொரு பாடமாய் இணையத்தளத்தில் இருந்து தங்கள் கணினிக்கு காணொளிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 8. தங்கள் மடிக்கணினிக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட காணொளிகளை பாடம்வாரியாக Pen drive-யில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
9. இது போன்றே பள்ளியில் உள்ள கணினி ஆய்வகத்தில் உள்ள Server -யில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தங்கள் பள்ளியில் மேற்கண்ட பாடங்கள் சார்ந்த பிரிவு மாணவர்களை அழைத்து அவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தரப்பட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்திட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD PDF மாணவர்களின் மடிக்கணினியில் மாணவரின் பாடத்தொகுப்பை சார்ந்த பாடங்களின் காணொளிகளை மட்டும், ஒவ்வொரு பாடமாக மாணவரின் மடிக்கணினிக்கு பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் செய்தபின் மாணவரின் மடிக்கணினியில், அனைத்து காணொளிகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டதா என சரிபார்த்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு காணொளிகளை திறந்து பார்த்து காணொளி சரியாக உள்ளதா என உறுதி செய்துகொள்வதும் சிறந்தது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் / பெற்றோர்கள் முககவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். பள்ளியின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பார்வையில் உள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளை(SOP) பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் (Containment Zone) மாணவர் எவரேனும் இருப்பின் அவர்களுடைய தனிமைபடுத்தப்பட்ட கால அளவு (Quarantine Period) முடிந்த பிறகு பள்ளிக்கு வரவழைத்து மாணவரின் மடிக்கணினிக்கு பதிவிறக்கம் செய்யவும். மேற்கண்ட அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்திட உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: அரசாணை நகல்
பெறுநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews