உடற்கல்வி ஆசிரியர்களை போல, ஆன்லைன் வாயிலாக, தங்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்று கேட்கின்றனர் கலைப்பாட ஆசிரியர்கள்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி, ஆறு நாட்கள் நடக்கிறது. தினசரி ஒன்றரை மணி நேரம் நடக்கும் இப்பயிற்சியில், ஒரு பிரிவில், தலா 500 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.இவர்களுக்கு குழந்தைகளின் மனநலனில், உடற்கல்வியின் பங்கு குறித்து, உளவியல் ரீதியாக விளக்கப்படுகிறது. இதேபோல், கலைப்பாட ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''மாணவர்களை உளவியல் ரீதியாகவும், தனித்திறமைகளை வளர்த்தெடுக்கும் வகையிலும், கல்விசாரா செயல்பாடுகளுக்கு, பாடவேளைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதற்கு முறையாக சிலபஸ் வெளியிடாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியப்படுத்துகிறது. உடற்கல்வி ஆசிரியர்களை போல, கலையாசிரியர்களுக்கும் ஆன்லைனில் புத்தாக்க பயிற்சி வழங்கினால், பள்ளி திறந்த பின், மாணவர்களை வழிநடத்த பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.